Asianet News TamilAsianet News Tamil

ஈகோ யுத்தத்தில் இறங்கிய சூர்யா – ஹரி! ஓங்கி அடிச்சு, ஒண்ணரை டன் வெயிட்டை காட்டப்போவது யார்?

இப்போது சூர்யா, ஹரி என இரு தரப்பும் செம்மயாக முறைத்துக் கொண்டுள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் பிளாக்குகளை ரசிகர்களுக்கு வழங்கிய இந்த கைகள், இன்று பரஸ்பரம் தங்களைக் குத்திக் கொள்ள முறுக்குவதுதான் ஷாக்கே.

Colliding Surya, Hari...
Author
Chennai, First Published Dec 30, 2021, 5:24 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பாலா, அமீர், கெளதம் வாசுதேவ் மேனன் என்று டாப் இயக்குநர்களின் கரங்களைப் பற்றி சட்டென டேக் ஆஃப் ஆனார் சூர்யா. இதன் மூலம் ஏ மற்றும் பி லெவல் ரசிகர்களிடம் ரீச் ஆனவரோ சி சென்டரை குறிவைத்தார். அதற்கு அவருக்கு கிடைத்த தரையடி தாறுமாறு குதிரைதான் இயக்குநர் ஹரி! 

அவரது இயக்கத்தில் ஆறு, சிங்கம் சீரீஸ், வேல்…என்று மளமளவென சூர்யா செய்த படங்கள் அவரை சி லெவலில் வேற லெவல் தொட வைத்தன. சிங்கம் சீரீஸில் மூன்றாவது பாகம் மோசமாக போன நிலையில், நான்காம் பாகத்துக்காக இருவரும் உட்கார்ந்தனர். ஆனால் ஹரி சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. இது ஹரிக்கே கடுப்பு. ஆனாலும், அடுத்து  ஒரு அதிரடி கதையை சொன்னார். அதிலும் சூர்யா சில நொட்டை நொள்ளைகள் சொன்னார். விளைவு, இருவரும் நண்பர்களாக பிரிந்தனர். 

 

இந்த நிலையில் சூர்யா வேறு இயக்குநர்களிடம் கமிட் ஆகிட, ஹரியோ தனது மச்சான் அருண் விஜய்யை அந்தக் கதையில் ஹீரோவாக்கி தீயாக ஷூட்டிங்கில் இறங்கினார். அப்படம் தான் ‘யானை’. அதேவேளையில் இங்கே சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில்  கமிட் ஆனார். இருபடங்களும் ரெடியாகி இதோ திரை தொட தயாராகிவிட்டன. 

இந்நிலையில் சூர்யா தனது தயாரிப்பில் வரும் படங்களை தொடர்ந்து ஓ.டி.டி.யிலேயே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தியேட்டர் தொழில் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக அத்துறையினர் ஆத்திரமடைந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பேசிய பலரில் இயக்குநர் ஹரியும் ஒருவர். அவர், ‘தியேட்டர் இல்லையென்றால் நமக்கெல்லாம் இவ்வளவு பெரிய வாழ்வில்லை.’ என்று அறிவுரை சொல்லியிருந்தால். இது சூர்யாவை செம்ம கடுப்பாக்கியது. ‘நீங்க அவர் படத்துல நடிக்காத  கோவத்துலதான் இப்படி சீண்டுறார்’ என்று சூர்யாவின் அடிப்பொடிகள் அவரிடம் ஹரியை பற்றி கொளுத்திப்போட்டனர். 

Colliding Surya, Hari...

ஹரியின் மச்சானும், யானை பட ஹீரோவுமான அருண் விஜய் ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் நடித்திருக்கும் ‘ஓ மை டாக்’ படம் ஓ.டி.டி. ரிலீஸுக்கு தயாராகி நாளாகிறது. ஆனால் சில பல காரணங்களை காட்டி அதை தள்ளிப்போட்டு வருகிறது தயாரிப்பு தரப்பான சூர்யா டீம். இசை சரியில்லை என்பது உள்ளிட்ட சில காரணங்களாம். 

தன் பட ரிலீஸ் தள்ளிப்போவதால் கடுப்பான அருண் விஜய், ஹரியிடம் இதை சொல்லி வருந்தியிருக்கிறார். ஹரி இதை விசாரித்தபோது ‘சூர்யா உங்க மேலே இருக்கிற கடுப்புல உங்க மச்சான் படத்துக்கு  ஆப்பு வைக்கிறார்’ என்று அவரது அடிப்பொடிகள் கொளுத்தியுள்ளனர் வெடியை. 

ஆக இப்போது சூர்யா, ஹரி என இரு தரப்பும் செம்மயாக முறைத்துக் கொண்டுள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் பிளாக்குகளை ரசிகர்களுக்கு வழங்கிய இந்த கைகள், இன்று பரஸ்பரம் தங்களைக் குத்திக் கொள்ள முறுக்குவதுதான் ஷாக்கே. 

ஓங்கி அடித்து, ஒன்றரை டன் வெயிட்டை காட்டப்போவது யார் ?

Follow Us:
Download App:
  • android
  • ios