Asianet News TamilAsianet News Tamil

காமெடி நடிகர் விவேக்கை விடாமல் துரத்தும் டி.டி.வி.தினகரன்...’அவர் வந்தே தீருவாராம்’...

“நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல. பொதுமக்களில் ஒருவன்” என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விளக்கம் அளித்தபிறகும் அவர் டி.டி.வி. தினகரன் கட்சிக்கு ஆதரவாக கண்டிப்பாக இறுதி மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று தினகரன் தரப்பு திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

cmedian vivek to join ttv
Author
Chennai, First Published Apr 1, 2019, 12:15 PM IST

“நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல. பொதுமக்களில் ஒருவன்” என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விளக்கம் அளித்தபிறகும் அவர் டி.டி.வி. தினகரன் கட்சிக்கு ஆதரவாக கண்டிப்பாக இறுதி மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று தினகரன் தரப்பு திட்டவட்டமாகக் கூறிவருகிறது.cmedian vivek to join ttv

பாராளுமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. வழக்கம்போல் இல்லாமல் இம்முறை மிகக் குறைவான நடிகர்களே தேர்தல் களத்தில் உள்ளனர். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அ.ம.மு.க.) நடிகர் விவேக் இணைந்துவிட்டார் என்றும், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று நடிகர் விவேக் மறுத்தார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...”நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயக கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.cmedian vivek to join ttv

ஆனால் விவேக் ட்விட்டர் பதிவைப் பொருட்படுத்தாத அ.ம.ம.க.வினர் இன்னும் இரு வாரங்களில் கண்டிப்பாக நடிகர் விவேக் எங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார். அதற்கான காரணத்தை விவேக்கே தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுக் களம் இறங்குவார் என்கிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios