’மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் ஐயா, இன்று காலை மத்து மணிக்கு இந்த விடுமுறை விண்ணப்பம் எழுதியிருக்கும் நான் செத்துவிட்டதால் எனக்கு அரைநாள் விடுமுறை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’என்று தனது பள்ளி மாணவர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு தலைமை ஆசிரியர் ஒப்புதல் கையெழுத்திட்டிருப்பது வைரலாகியிருக்கிறது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் 8-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவன் அரைநாள் விடுப்பு தருமாறு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டுள்ளான். இதற்காக விடுப்புக் கடிதம் எழுதியுள்ளான் அந்த மாணவன். அதில், ‘நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் தனக்கு அரைநாள் விடுமுறை வேண்டும் ’ எனவும்  எழுதியிருந்தான். தன் பாட்டி இறந்து விட்டதாக எழுதுவதற்கு பதில் அவ்வாறு எழுதியுள்ளான். 

 தனது மிகவும் பிசியான வேலைகளுக்கு மத்தியில் இதை கவனிக்காத தலைமை ஆசிரியரும் கையொப்பமிட்டு அனுமதி வழங்கியுள்ளார்.மாணவரின் இந்த விடுப்புக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வேடிக்கையான நிகழ்விற்கு பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலுக்கு வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த தலைமை ஆசிரியரின் மரணத்துக்கே லீவு கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார் போல. அவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரு’என்றும் சிலர் கமெண்ட் அடித்துவருகின்றனர்.