தமிழின் மெகா ஹிட் படங்களுல் ஒன்றான ‘பாலைவனசோலை’ படத்தை இயக்கிய இரட்டையர்களுல் ஒருவரான ராபர்ட் [ராஜசேகர்] இன்று காலமானார். அவருக்கு வயது 68.

தமிழின் மெகா ஹிட் படங்களுல் ஒன்றான ‘பாலைவனசோலை’ படத்தை இயக்கிய இரட்டையர்களுல் ஒருவரான ராபர்ட் [ராஜசேகர்] இன்று காலமானார். அவருக்கு வயது 68.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பல வருடங்களாகவே திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருக்கும் ராபர்ட் தனது உயிர் நண்பர் ராஜசேகருடன் இணைந்து ஒளிப்பதிவாளராக டி.ராஜேந்தரின் ‘ஒரு தலை ராகம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ராபர்ட்-ராஜசேகர் என்ற கூட்டணிப் பெயரில் இவ்விருவரும் இணைந்து படங்களை இயக்க ஆரம்பித்தார்கள்.

இவ்விருவரும் இணைந்து 'பாலைவனச் சோலை', ’கல்யாணக் காலம்’, ’தூரம் அதிகமில்லை’, ’சின்னப் பூவே மெல்லப் பேசு', 'மனசுக்குள் மத்தாப்பு' ஆகிய படங்களை இயக்கினர். பின்னர் ராஜசேகர் திரப்படங்களிலும் சின்னத்திரையிலும் பிசியான நடிகராகி விட ராபர்ட் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த ராபர்ட் இன்று காலை 10 மணிக்கு பொத்தேரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.