'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதை அந்த நடிகை நல்ல விதமாக பயன்படுத்தி சென்னை வளசரவாக்கம் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு கட்டி வருகிறார். 

இதற்காக, அவருடைய நட்புக்குரிய நாயகன் ஒருவரிடம் ரூ. 2 கோடி உதவி கேட்டாராம். உடனடியாக நாயகிக்கு உதவிய அந்த நாயகன் தன்னுடைய உதவியை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாராம். இதனால் நாயகியும் இதனை ரகசியமாக வைத்துள்ளாராம்.

துணிச்சல் நடிகை:

துணிச்சல் நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் உள்ள இவர், அவருடைய மார்க்கெட் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக, ஒரு படம் தயாராகி வருகிறது. அந்த படத்தை தயாரிப்பவர் அவருடைய மானேஜர்.

படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முடிவுடன், இந்த படத்தில் பெரிய பெரிய நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளாராம் மேனேஜர். இதனால் நடிகையும் துணிச்சலாக  ஒரு கை பார்க்கலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.