பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா, கந்து வட்டி கேட்டு மிரட்டி வருவதாக சதீஷ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போத்ரா, தமிழ் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். இவரிடம் சதீஷ்குமார் என்பவர் பைனான்ஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. சதீஷ்குமாரிடம் இருந்து மேலும் பணம் பெறும் எண்ணத்தில் அவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியுள்ளார் போத்ரா. அவரது மகன் ஜெகன் போத்ராவும் சதீஷ்குமாரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராக மோசடி வழக்கை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் சினிமா பைனான்சியர் போத்ரா. அதேபோல், ஐஜேகேவின் தலைவர் பச்சமுத்து பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாகவும் புகார் கொடுத்திருந்தார்.

இதையடுத்து, சதீஷ்குமார், கந்துவட்டி கேட்டு தன்னை மிரட்டி வருவதாக போத்ரா மீது புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ராவை இன்று கைது செய்தது. மேலும் போத்ராவின் மகன் ஜெகன் போத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.