பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் இது மோசமான மனநிலையை காட்டுகிறது,   அதுமட்டுமின்றி இதுபோன்ற காட்சிகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நடிகை பார்வதி கவலை தெரிவித்துள்ளார் .  தமிழில் பூ,  மரியான் உள்ளிட்ட படங்களில் அறிமுகமான பார்வதி மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் . இந்நிலையில் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு  பேட்டி கொடுத்துள்ள அவர், 

சினிமாவில் பெண் வெறுப்புகளை அதிகமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்,  பெண்ணை உயர்வாக சித்தரிப்பதற்கும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் காட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது .  அதோடு பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை பார்த்தது ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் என்பதற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பதா.?  அதற்கு மாற்றாக ரசிகர்களை யோசிக்க தூண்டும் வகையில் படக்காட்சிகள் அமைக்கவேண்டும் .  பெரும்பாலும் நான் நடிக்கும் படங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்கிறேன்.  அதுபோல மற்ற நடிகைகளும் இருக்க வேண்டும்.   எனக்கு 13 வயது இருக்கும்போதே இது போன்ற காட்சிகளை பார்த்து நெளிந்து இருக்கிறேன்.  ஆனால் மற்றவர்கள் அதை பார்த்து ரசிக்கிறார்கள். 

அதில் நானும் பாதிக்கப் பட்டிருக்கிறேன் இது போன்ற பெண்களுக்கு எதிரான திரைப்படங்கள் இளம் பெண்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வணிக நோக்கத்தில் படம் எடுப்பதற்காக பெண்களை இழிவுபடுத்தும் வகையில் படம் எடுக்கக்கூடாது.  தெலுங்கில் வெளியான அர்ஜுன்ரெட்டி படத்தில் காதலர்கள் கண்ணத்தில் நடந்து கொள்வது பாலியல் வன்முறையை தூண்டியுள்ளது.  என  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.