நயன்தாராவின் ஜாகுவார் காருக்கு அந்த லக்கி டிரைவர் இவர்தான் ... பல சுவையான சினிமா செய்திகள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முன்னணி நடிகர்களை வீழ்த்தி சம்பள விஷயத்தில் முந்தியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘பி.எம்.டபிள்யூ’ கார் வைத்திருந்தார். இப்போது புதிதாக, ‘ஜாகுவார்’ கார் வாங்கியிருக்கிறார். விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகைகள் பட்டியலில், நயன்தாரா பெயரும் இடம் பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை நகருக்குள் அவர், ‘ஜாகுவார்’ காரை பயன்படுத்துகிறார். வெளியூர் படப்பிடிப்புகளுக்கு ‘பி.எம்.டபிள்யூ’ காரை பயன்படுத்துகிறார். வெளியூர்களுக்கு செல்லும்போது, அவருடைய காதலர் விக்னேஷ் சிவனே கார் ஓட்டுகிறாராம்!

அமலாபால், அவருடைய சம்பளத்தை திடீர் என்று உயர்த்தி இருக்கிறார். இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி கேட்கிறார். விளம்பர படத்துக்கும் அவர் இதே சம்பளத்தை கேட்கிறாராம், அமலாவின் சம்பலவிஷயத்தைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சூடேறிப்போய் கிடக்கிறார்களாம்.

பல சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியான சர்க்கார் வசூல் சாதனை செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இந்த படம், உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.125 கோடியும், சென்னையில் மட்டும் ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!