cinema bit news about rajini vijay simbu and dhanush

ரஜினி, விஜயை பின்னுக்கு தள்ளிய தனுஷ்...

தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையால் வலம் வருபவர் தனுஷ். சாதாரண நடிகராக திரையுலகில் நுழைந்த இவர் தற்போது பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரம் எடுத்துள்ளார்.

இவரை, சமூக வலைதளமான ட்விட்டரில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவிலேயே அதிகமானோர் பின்பற்றும் நடிகரில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இதன்மூல ரஜினி மற்றும் விஜயை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதனை தனுஷ் ரசிகர்கள் பல்வேறு ஹேஸ்டேக்குகளை உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில் கண் கலங்கிய சிம்பு!

தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், பாடகர் என பல திறமைகளுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தன் மனதில் பட்டதை எப்போதுமே பட்டென பேசக்கூடியவர். இதனால் தான் இவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் சுற்றிக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட AAA பிரச்சனை அவருக்கு மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் சிம்பு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர்கள் அனைவரும் அவரை கொண்டாடினர். ரசிகர்களின் பாசத்தை கண்டு சிம்பு பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். சிம்பு அழுததை கண்டு ரசிகர்களும் சிலர் கண் கலக்கியுள்ளனர். இதனால் அரங்கமே சில நொடிகள் சற்று அமைதியாக மாறியதாம்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தூக்கிப் போட்ட ரஜினி!

தமிழ் சினிமாவில் அன்று இன்று வரை மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது தீவிர அரசியலிலும் இறங்கியுள்ளார். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடைமொழியாக இருந்து வந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நீக்கியுள்ளார்.

இதுவரை இந்திய சினிமாவின் மெகா ஸ்டாராக விளங்கிவரும் அவர் இனி தீவிர அரசியலில் இறங்கியுள்ளதால் இந்த முடிவை எடுதுள்ளதாக சொல்லப்படுகிறது.