#ChiyaanVikram  மற்ற படங்களுக்கு வழக்கமா இசையமைத்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக விக்ரம் 61-ல் புதிய இசையமைப்பாளரை பா.ரஞ்சித் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் ஏற்கனவே தினேஷ் நடிப்பில் அட்டக்கத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ், ரஜினிகாந்தின் கபாலி, காலா, ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட ஹிட் படங்களை தமிழுக்கு தந்துள்ளர். இந்நிலையில் பி.ரஞ்சித் முதல் முறையாக சீயான் விக்ரமை இயக்க உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

மகான் திரைப்படத்தில் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த 2 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. கோப்ரா பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த படங்களுக்கு பிறகு விக்ரம் நடிக்கும் 61-வது படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் விக்ரம் நடிக்க உள்ள அடுத்த படத்தை பா.ரஞ்சித் டைரக்டு செய்ய இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது இந்த தகவலோடு மற்றோரு சுவாரஸ்ய தகவலும் வேல்;இவந்துள்ளது. பா.ரஞ்சித்தின் மற்ற படங்களுக்கு வழக்கமா இசையமைத்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக விக்ரம் 61-ல் புதிய இசையமைப்பாளரை பா.ரஞ்சித் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சீயான் விக்ரமின் ரசிகர்கள் படு குஷியாகி வருகின்றனர். அதோடு #ChiyaanVikram என்னும் ஹேஸ் டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.