'பாபுமோஷாய் பந்தூக்பாஸ்’ படத்தில் நடித்தபோது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை பார்த்தும் பார்க்காதது போன்று இருந்தார் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கி என்கிறார் நடிகை சித்ரங்கடா சிங். 

யாருய்யா இந்த நவாசுத்தீன் சித்திக் என்று கேட்பவர்களுக்காக.. ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் நடித்து வருபவர் என்று சொன்னால் எளிதில் விளங்கும். குஷால் நந்தி இயக்கிய பாபுமோஷாய் பந்தூக்பாஸ் படத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு வெளியேறினார் சித்ரங்கடா சிங். கதைக்கு தேவையில்லாத நிலையில் படுக்கையறை காட்சிகளில் நடிக்குமாறு கூறி இயக்குனர் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார் அவர். 

இந்நிலையில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள இந்த நேரத்தில் சித்ரங்கடா கூறியிருப்பதாவது, படத்தின் இயக்குநர்.சேலையை அவிழ்த்துவிட்டு ஜாக்கெட்டின் ஊக்கை கழற்றிவிட்டு ஹீரோவான நவாசுத்தீன் சித்திக்கியின் மீது ஏறி அமர்ந்து என்னை நானே தடவ வேண்டும் என்று கூறினார். சேலையை அவிழ்ப்பதா, நான் உள்பாவாடை மட்டும் தானே போட்டிருக்கிறேன். முடியாது என்று எவ்வளவோ கூறியும் இயக்குனர் குஷால் கண்டுகொள்ளவில்லை.

 

அப்படி என்னால் நடிக்கமுடியாது என்று நான் எவ்வளவோ மறுத்தும் ‘சும்மா ...மாதிரி நடிக்காதடி’ என்று இயக்குநர் என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். இதில் கொடுமை என்னவென்றால் எனக்காக கொஞ்சம் கூட பரிந்துபேசாமல் நவாசுதீன் ரசித்து வேடிக்கை பார்த்தார். இதை நான் இன்னும் மறக்கவில்லை’