பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பாக நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில், சித்ராவுடன் தங்கியிருந்த அவருடைய கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் ஹேமந்திற்கும் சித்ராவிற்கும் இடையே ஏற்கனவே பதிவு திருமணம் நடந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார். சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ் அக்கா சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. 

இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேம்நாத் சற்று நேரத்திற்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்கள் காவலில் வைத்து ஹேம்நாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.