கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு இரண்டாம் திருமணத்திற்கு தயாரான 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை பவானி ரெட்டி!

பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி அவருடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 

chinnathambi seriyal actress bavani reddy marriage

பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி அவருடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால்  இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

chinnathambi seriyal actress bavani reddy marriage

தற்போது நடிகர் பிரஜன் நடித்து வரும், 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது.

இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு இவருடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் எழ கணவர் பிரதீப், திருமணம் ஆன எட்டு ஆண்டுகளிலேயே, தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள,  மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். 

chinnathambi seriyal actress bavani reddy marriage

இதை தொடர்ந்து இவர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். இவரும் ஒரு நடிகர் என கூறப்படுகிறது.

இரண்டாவது திருமணம் குறித்து பவானி ரெட்டி கூறுகியில், "எனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை. எனது பெற்றோரின் விருப்பத்திற்காகவே திருமணம் செய்ய முடிவெடுத்தேன், இதற்காக ஆறு மாதங்கள் யோசித்து பிறகு தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

chinnathambi seriyal actress bavani reddy marriage

இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இரண்டாவது திருமணம் என்பதால் பிரமாண்டமாக நடத்துவதை தவிர்த்து எளிமையான முறையில் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios