பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தளத்தில்  கடந்த சில நாட்களாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் மட்டும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. 

இவரது ட்விட்டர் கணக்கு சில நபர்களால்  ஹேக் செய்யப்பட்டு அதில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் இரண்டு நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் பாடகி சின்மயி இருந்த புகைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஹேக்கர்களின் கைவரிசை என்று கூறப்பட்டு வரும் நிலையில் பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 பாடகி சுசித்ரா  சில தினங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், நல்ல உடல்நிலையில் அவர் இல்லாததை அவருடைய கணவர் கார்த்திக் குமார் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில் இருந்து தெரியவருவதாகவும் சின்மயி கூறியுள்ளார்

சுசித்ராவின் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகளால் தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இருப்பினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் யாருக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் சின்மயி தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த அளவுக்கு தான் நல்ல நிலையில் இருப்பதற்கு தனது திறமை மட்டுமே காரணம் என்றும் தனக்கு உண்மையாக ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி என்றும் சின்மயி தெரிவித்துள்ளார்.