பாடகி சின்மயி தமக்கு பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கும் சம்பவம், கோடம்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பொது இடத்தில் தம்மை ஒருவர் பாலியல் ரீதியாக தொட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொங்கி எழுந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ போட்டு வறுத்தெடுத்து பாடகி சின்மயி, தற்போது மீண்டும் ஒரு புகாரை ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது, பிரபலமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து, #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். 

பாடகி சின்மயி தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் அனுபவங்கள் மட்டுமில்லை, தற்போது இணையம் மூலமாக தமக்கு வரும் இணைய சீண்டல்கள் குறித்தும் பாடகி சின்மயி கூறியுள்ளார். அதாவது, ஒருவர் தனக்கு கருத்து ரீதியாக ஆதரவு தருவது போல் பேசி, பிறகு அதை சாதகமாக பயன்படுத்தி பாலியல் ரீதியாக காம வலை வீசியதாக சின்மயி கூறியுள்ளார . அவர் வேறு யாருமல்ல, பிரபல யூடியூப் விமர்சகரான பிரசாந்த் தான் என்று சொல்லியுள்ள சின்மயி, ஆரம்பத்தில் டார்லிங் என்றும், ஸ்வீட் ஹார்ட் என்றும் பிரசாந்த் பேசியதாக தெரிவித்துள்ளார். 

பிரசாந்த் என்னிடம் பேசிய நோக்கம் தவறாக இருப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்திவிட்டதாக சின்மயி தெரிவித்துள்ளார். ஆனால் அதன்  பிறகு, தனக்கு எதிரான கருத்துக்களை பிரசாந்த் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் என்றும் பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.  ஆனால் சின்மயியின் இந்த குற்றச்சாட்டை சீரியசாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்று பிரசாந்த் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு பின்னர் பிரபல பாடகி சுசித்ரா பாடகி சின்மயி பற்றி கூறிய விஷயங்கள் எல்லாம் உண்மை என்றால் தற்போது சின்மயி கூறுவது உண்மை என்று பிரசாந்த் பதிலடி கொடுத்துள்ளார். 
   
இதனால் ஆத்திரம் அடைந்த சின்மயி, தன் மீது சுசித்ரா கூறியது உளவியல் தொடர்பான பிரச்சனையால்என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால் சுசித்ரா கூறியதைவைத்து என்னை அவமானப்படுத்த பிரசாந்த் முயற்சித்து இருப்பதாகவும் சின்மயி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு தான் எல்லை மீறி பேசியதாக கருதினால் தன் மீது காவல் நிலையத்தில் சின்மயி புகார் அளிக்கலாம் என்று பிரசாந்த் பதில் அளித்துள்ளார்.