கோலிவுட் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் கவிஞர் வைரமுத்து குறித்த பாலியல் சர்ச்சை தான். இவரை தொடர்ந்து, 'metoo #' ஹாஷ்டாக் மூலம் பல பிரபலங்களின் முகத்திரை கிழிய துவங்கியுள்ளதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு 18 வயது இருந்தபோது, வைரமுத்து வீட்டுக்கு சென்றிருந்தேன்…அப்போது திடீர் என அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன் என்று தெரிவித்து, metoo ஹாஷ்டாக்கில் வைரமுத்து பெயரை பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவருடைய ட்விட்டை முதலில் ரீ ட்விட் செய்த சின்மயி, தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பேச துவங்கினார். இவருடைய பதிவுகள் தற்போது கோலிவுட் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில், சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும். என கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரின் இந்த பதிவுக்கு ஒரே வார்த்தையில் 'LAIR ' என கூறி பதிலடி கொடுத்து அவருடைய மூக்கை உடைத்துள்ளார் சின்மயி! 

அந்த ட்விட் இதோ: