Asianet News TamilAsianet News Tamil

உள்ளாடை தெரியும் படி உடை அணியவில்லை! பாடகி சின்மயி விளக்கம்!

செய்தியாளர் சந்திப்பின் போது பாடகி சின்மயி அணிந்து வந்த ஆடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் அவர் பதிலடி கொடுத்துள்ளார். 

Chinmayi Dressing issue
Author
Chennai, First Published Oct 31, 2018, 10:22 AM IST

செய்தியாளர் சந்திப்பின் போது பாடகி சின்மயி அணிந்து வந்த ஆடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

 Chinmayi Dressing issue

மி டூ விவகாரம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தைரியமாக சொல்வதற்காக தொடங்கப்பட்டது தான் #மி டூ இயக்கம். ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது கோலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை. தமிழ் திரையுலகில் மி டூவுக்கு சலங்கை கட்டி விட்டவர் பாடகி சின்மயி. அதுவும் கவிப்பேரரசு வைரமுத்து மீது இவர் கூறிய பாலியல் புகார் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை ஹோட்டல் ரூமுக்கு வைரமுத்து வரச்சொன்னதாக குற்றம்சாட்டி இருந்தார் சின்மயி.  Chinmayi Dressing issue

இதைத் தொடர்ந்து தென்னிந்திய திரையுலக பெண்கள் மையம் சார்பில், லீனா மணிமேகலை, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார் சின்மயி. சிவப்பு வண்ண ஸ்லீவ் லெஸ் மற்றும் நெக்-லெஸ் டீசர்ட் அணிந்திருந்தார் சின்மயி. கழுத்தை ஒட்டி இரு பட்டைகள் தெரியும் வண்ணம் அவரது ஆடை இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார் சின்மயி. பாடகிகள் என்றால் புடவை அணிந்து இருக்க வேண்டும் என்று ஜானகி, பி.சுசிலா ஆகியோரின் புகைப்படங்களையும் விமர்சகர்கள் பதிவிட்டு இருந்தனர்.  Chinmayi Dressing issue

தற்போது ஹரிஹரண் நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள சின்மயி, தமது ஆடை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விமர்சனத்தால் அப்செட் ஆகியுள்ளார். நவம்பர் 17ஆம் தேதி நாடு திரும்ப முடியும் என்பதால் தமது பதிலடியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுவது முட்டாள் தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். Chinmayi Dressing issue

பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஆண்கள், பணம் சம்பாதித்து செழிப்பாக வாழ வேண்டும், பெண்கள் மட்டும் கனவுகளை மறந்து விட்டு ஓட வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதேபோல் தமிழ் சமூக ஆண்கள் தன்னுடைய ஆடை குறித்து கருத்து பதிவிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாடகிகள் என்றால் புடவைகள் தான் அணிய வேண்டும், என்றும், எப்போது வேண்டுமானாலும் படுக்கையை பகிர்ந்து கொள்ள தயார் என்று எண்ண வைக்கும் அளவுக்கு பிரா தெரியும் வகையில், ஸ்லீவ் லெஸ் டிரசை டைட்டாக உடை அணியக் கூடாது என்று சிலர் அறிவுரை கூறியிருப்பதாக  சின்மயி பதிவிட்டுள்ளார். ஆனால் கழுத்து வலி இருந்ததன் காரணமாகவே ஷோல்டர் பிரேஷ் அணிந்து வந்ததாகவும், அது ஒன்றும் பிரா பட்டை அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios