இந்த வாரம் கூட வைரமுத்துவை வசைபாடி சின்மயி போட்ட ட்விட்டால் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வரவிருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது தமிழக பா.ஜ.க. சின்மயியும் ஒரு ட்விட் போட்டிருந்தார். இப்போது இன்னொரு குடைச்சல்.

ஏ.ஆர்.ரஹ்மான்-வைரமுத்துவின் 27 வருட கூட்டணி முறிந்துவிட்டதாக தகவல். ஏனென்று விசாரிப்பதை விட அவர் இடத்தை நிரப்பப் போவது யார் என்பதுதான் முக்கிய செய்தியாக இருக்கிறது. பேனா தொலைஞ்சாலும் பென்சில் உதவுச்சேங்கற கதையாக எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் வரும் ஒரு சில வார்த்தைகளையே கோர்த்து பாடலாக்கிவிட்டாராம் ரஹ்மான்.

‘பொன்னியின் செல்வன்’படத்திற்காக உருவான இந்தப் பாடலை ஆஹா ஓஹோவென மணிரத்னமும் புகழ, இன்னும் எதேனும் வரிகள் கிடைக்கிறதா என்று மேய்கிறார்களாம். பொன்னியின் செல்வன் வரலாற்றுப்படம் என்பதால் வைரமுத்து பாடல் எழுதினால் நன்றாக இருக்கும் என விரும்பினார் மணிரத்னம். இது தொடர்பாக வைரமுத்துவிடமும் பேசி முடித்து விட்டார்கள்.

 

இதனை அறிந்த சின்மயி, மணிரத்தினத்திடம் பேசினால் வேலைக்காகாது என நினைத்து நேரடியாக அவரது இல்லத்தரசி சுஹாசினியை பிடித்து சரியாக வத்தி வைக்க, சுஹாசினி சூடம் கொழுத்த மணி மனது மாறி விட்டது. பிறகு தான் வைரமுத்துவை பாட்டெழுத வைக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தார்களாம். காரியத்தை கமுக்கமாக முடித்து விட்டார் சின்மயி.  மாமிகள் ஒன்று சேர்ந்தால் நடத்த முடியாத காரியமிருக்கிறதா..? ஆத்துக்காரி சொன்னால் அப்பீல் ஏது?