chief minister pinarayu vijayan wish the actor vivek movie
“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம், குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அவசியமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மொய்தீன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் உள்துறை செயலாளர் ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
