பிரபல பாலிவுட் சீரியல் நடிகை சாவி மிட்டலுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இரண்டாவது குழந்தை பிறந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதிப்பால் அவதி பட்டு வந்த இவர் தற்போது படுத்த படுக்கையாக உள்ளதாக கூறியுள்ளார். 

இந்நிலையில் இவருடைய உடல் நிலை, மிகவும் மோசமாக உள்ளது என்றும் இருப்பினும் தன்னுடைய வேலையை படுக்கையில் இருந்து கூட கவனித்து வருவதாகவும் சாவி மிட்டல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... முதுகு தண்டு வடம் பாதிப்பால் தற்போது என் கால்களால் தரையில் கூட நிற்க முடியவில்லை. ஒரு காதும் கேட்க வில்லை. முடிந்த வரை, பெட்டில் தான் படுத்த படுக்கையாக இருக்கிறேன். ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பெட்டில் சாய்ந்தவாறு அமர்ந்து, வெப் சீரிஸ் பணியையும் வலிகளோடு செய்து வருகிறேன் என கூறியுள்ளார். 

இவரின் நிலையை பார்த்து, ரசிகர்கள் பலர் தொடர்ந்து இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். 

View post on Instagram