நடிகை மீரா மிதுனும் கவின் ஆதரவாளர்களும் இயக்குநர் சேரனுக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகள் எழுப்பி வரும் நிலையில் அவர்கள் அத்தனை பேருக்கும் மொத்தமாக தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் பூடகமாக பதில் அளித்திருக்கிறார் அவர்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சேரன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக மீரா மிதுன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் கவின் ஆதரவாளர்கள் சேரனை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்....29 வயது பையனுக்கு இருந்த நேர்மை, தைரியம் கிட்டத்தட்ட 45 வயதான 4 national awards வாங்கின சேரன்-ஆன உங்ககிட்ட இல்லை என்பதே உண்மை. BB3 🏠சேரன்கிட்ட இருந்தது அப்பட்டமான "பொறாமை" மட்டுமே. 90வது நாள் eviction அப்ப KAVIN பத்தி சொன்னது உண்மை என்று உங்க மனசுக்கே தெரியும்_. உண்மைக்கு மரணமில்லை என்று குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

இதற்கு பதிலளித்த சேரன் கவினுக்கு என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது என்று சேரன் அளித்த பேட்டியை பார்த்துவிட்டு தான் கவின் ஆர்மி அவரை வசை பாடிக் கொண்டிருக்கிறது. கவின் எந்த ஒரு பேட்டியிலும் உங்களைப் பற்றி எதுவும் தவறாக பேசவில்லை, அப்படி இருக்கும்போது போலியாக நடந்து கொண்ட நீங்கள் எப்படி கவினை பற்றி அப்படி பேசலாம் என்று அவரின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.போதும் சேரப்பா, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. தொடர்ந்து அசராமல் நடிக்க வேண்டாம் என்று கவின் ஆர்மிக்காரர்கள் அவரை விளாசியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் அத்தனைக்கும் மறைமுகமாக பதிலளித்த சேரன்,...முற்றுப்புள்ளி...
சில நேரங்களில் அவசியமாகிறது முற்றுப்பெறாத முக்கிய புள்ளிகள் என நாம் நினைத்தவர்களிடமும்.

கேள்விக்குறி..
தானாய் உருவாகிறது காரணமே இல்லாமல் நம்மை வெறுப்பவர்களை பார்த்து..

ஆச்சர்யக்குறி..
பிரமிக்கவைக்கிறது
அளவுகடந்த அன்பு எந்த எதிர்பார்ப்புமின்றி கிடைக்கும்போது.

சேரனின் ட்வீட்டை பார்த்த அவரின் ஆதரவாளர்களோ, சார் நீங்கள் விளக்கம் அளிக்கும் அளவுக்கு அந்த நபர்கள் ஒர்த் இல்லை, ஃப்ரீயா விடுங்கள். நீங்கள் உண்மையாக நடந்து கொண்டது எங்களுக்கு தெரியும் என ஆறுதலாக கூற அவரைப் பிடிக்காதவர்களோ,...உங்கள காரணமில்லாமா வெறுக்க நாங்க லூசா சார்? நானே தொலைந்த கதை பாட்டு இப்பவும் எனக்கு பிடிக்கும்.காதல் படங்களா எடுத்துட்டு, #Kavin #Losliya து மட்டும் மக்கள் மனதை கெடுக்கும்னு சொல்றது தப்பு சார்.அப்போ நீங்க காதல் படங்களே எடுத்துருக்க கூடாது...என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.