பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. மீரா தன்னை வலிக்கும் படி சேரன் தள்ளி விட்டதாக கூறியது, சேரனை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

இதனால், இனி நான் யாரிடமும் பேச மாட்டேன் என கூறி விட்டு தன்னுடைய பெட்டிற்கு, போய் மைக்கை கழற்றி வீசி விட்டு இனி இங்கு இருக்கப்போவது இல்லை, வெளியேற போவதாக கூறுகிறார்.

இவரை முதலில் லாஸ்லியாவும், தற்போதைய பிக்பாஸ் வீட்டின் தலைவியான ரேஸ்மாவும், சமானதாம் செய்கிறார்கள். அப்போது எனக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இந்த வயதில் இப்படி ஒரு பெண்  என் மீது பழி சுமற்றுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை கூறி கதறி அழுகிறார். 

சேரன் அழுவதை பார்த்ததும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பலர் ஒன்று கூடி, சேரனை சமாதானம் செய்கிறார்கள். அப்போது, மீரா தன்னை வேண்டும் என்றே அசிங்க படுத்த நினைப்பதாக கூறுகிறார் சேரன். 

அதே போல், மீராவிடமும் சித்தப்பு சரவணன் இது குறித்து பேச மீரா அவர் என்னை வலிக்கும் படி தள்ளி விட்டார் என்று தான் சொன்னேன் அவரை பற்றி தவறாக பேசவில்லை என பிடிவாதமாக இருக்கிறார். சாண்டி மற்றும் கவின் மீராவை சமாதம் செய்ய வந்த போது கூட அவர் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை.

எனினும் ஒரு வழியாக அனைத்து போட்டியாளர்களும், சேரனை சமாதானம் செய்து கமல் முன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் இப்போது அமைதியாக இருங்கள் என கூறி மீண்டும் மைக்கை அணிவித்து அவரை போட்டியில் தொடர செய்கிறார்கள்.