RK Selvamani : சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர்.கே செல்வமணி. நடிகை ரோஜாவின் கணவரான இவர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருந்து வருகிறார். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும், முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசும் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தனர். அப்போது பைனான்சியர் போத்ரா என்பவர் குறித்து சில கருத்துக்களை அவர்கள் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சினிமா பைனான்சியர் போத்ரா, இயக்குனர் ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசுஆகியோர் மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் ஆர்.கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் அவர்கள் இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்ட சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படியுங்கள்... Oh My Dog : பீஸ்ட் ரிலீசான மறுவாரமே அதிரடியாக களமிறங்கும் சூர்யா படம்... திடீர் அறிவிப்பால் ஷாக்கான ரசிகர்கள்
