Asianet News TamilAsianet News Tamil

வசூலில் மிரட்டிய வேலைக்காரன்... முன்னணி நாயகர்களை வீழ்த்தி சாதனை!

Velaikkaran Chennai Box Office Collections from Dec 18th 2017 to Dec 24th 2017
Chennai Box Office Collections from Dec 18th 2017 to Dec 24th 2017
Author
First Published Dec 26, 2017, 9:06 AM IST


உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் என்றால் அது சிவகார்த்தி கேயனின் வேலைக்காரன் படம் காரணம் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன் ராஜா கூட்டணி அதோடு சிவகார்த்திகேயன் படம் என்றால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒருபக்கம், அடுத்து சினிமாகாரர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் என்ன சாதிக்கிறார் என்பது தான் அதை ஈண்டும் நிருபித்துள்ளார். இப்படம் வெற்றியோடு வசூலிலும் மிக பெரிய சாதனை என்று தான் சொல்லணும். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

Chennai Box Office Collections from Dec 18th 2017 to Dec 24th 2017

அதேபோல் பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக சினேகா நடித்துள்ளார். 

Chennai Box Office Collections from Dec 18th 2017 to Dec 24th 2017

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் ரூ. 89 லட்சம் வசூலித்துள்ளது. அதோடு சென்னையில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களின் வரிசையில், வேலைக்காரன் 7-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 15.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால் ரூ 30 கோடிகளுக்கு மேல் 4 நாட்களில் வசூல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Chennai Box Office Collections from Dec 18th 2017 to Dec 24th 2017

வேலைக்காரன் படம் வசூல் சென்னையில் 98 லட்சமும் Day 2 Chennai City – 98Lacs. படத்தில் சமூக கருத்து இருப்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, உலக அளவில் முதல் நாளில் நல்ல வசூலையும் சென்னையில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் ரூ 15.5 கோடி வசூலையும் பெற்றது.

Chennai Box Office Collections from Dec 18th 2017 to Dec 24th 2017

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, சென்னையில் மட்டும் படம் ரூ 2.88 கோடி வசூலாகி உள்ளது, சிவகார்த்திகேயன் வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்றால் அது வேலைக்காரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios