லைகா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் படம் 'செக்கசிவந்த வானம்'. இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதீதி ராவ், ஜஸ்வர்யா ராஜேஷ், டயானா ஏரப்பா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப் படத்துக்கு, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். 

இந்நிலையில் படத்தின் ஹீரோக்களின் ஃபஸ்ட் லுக் கடந்த வாரம் ஒவ்வொரு நாளாக வெளியிடப்பட்டது, இதைத்தொடர்ந்து தற்போது கதாநாயகிகள் மறறும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த படத்தின்... டிரைலர் நாளை வெளியாக உள்ளதால் இதுகுறித்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.  இதில் படத்தில் நடித்துள்ள அனைவரும் கூடி நின்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. 

இந்த போஸ்டரை பார்க்கும் போது, இது ஒரு குடும்ப திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.