"செக்க சிவந்த வானம்" படம் எப்படி இருக்கு?
இயக்குனர் மணிரத்திரனத்தின் இயக்கத்தில் ரிலீசாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் திரைப்படம் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்.
இயக்குனர் மணிரத்திரனத்தின் இயக்கத்தில் ரிலீசாகி இருக்கும் செக்கச்சிவந்த வானம் திரைப்படம் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக். தனக்கு என தனி பாணி ஒன்றை வைத்திருக்கும் இவரின் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் பொதுவாக ஹீரோவின் கதாப்பாத்திரம் தான் தூக்கலாக இருக்கும்.
ஆனால் மணிரத்தினம் படத்தில் மட்டும் எப்போதுமே அவர் தான் ஹீரோவாக இருப்பார். அந்த அளவிற்கு கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்குமே மக்கள் மனதில் நிற்கும்படியான ரோலை தருவது அவரின் இன்னொரு தனி சிறப்பு. அந்த வகையில் தான் செக்க சிவந்த வானம் திரைப்படத்தினில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் பொன்னியின் செல்வன் கதை படித்தது போல இருந்ததாக கூறி இருக்கிறார்.
தமிழ் வாசகர்களால் கொண்டாடப்படும் இந்த காவியத்துடன் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை ஒப்பிட்டு சொல்ல பல காரணங்கள் இருக்கின்றன. சமுதாயத்தில் மிகப்பெரிய புள்ளியான, அதே சமயம் மதிப்பிற்குரிய கிரிமினலாக வரும் பிரகாஷ்ராஜ். சிம்மாசனம் போன்ற அவரின் இடத்தை பிடிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கும் மூன்று மகன்கள். முரடனாக அதே சமயம் அப்பாவின் வார்த்தைகளை கேட்டு செயல் படும் மகனாக அரவிந்த்சாமி. ஸ்டைலிஷாக தெரிந்தாலும் உள்ளுக்குள் அப்பவின் பிள்ளைகளாகவே இருக்கும் அருண்விஜய் மற்றும் சிம்பு.
கடைசி வரையில் நல்லவரா? கெட்டவரா? என கணிக்க முடியாத கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி. தீர்க்கமான பர்வையுடன் அதே தீர்க்கமான வசனங்களை பேசும் ஜோதிகா. என ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையுமே இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என எண்ணம் கொள்ள செய்திருக்கிறார் இயக்குனர். மிகப்பெரிய புள்ளியான பிரகாஷ்ராஜை கொல்ல ஒரு கும்பலே அலைகிறது.
இதை அறிந்து கொண்ட அவரின் மூன்று பிள்ளைகளுமே இந்த வேலைகளை செய்தது யார் என அறிந்து கொள்ள போராடுகின்றனர். அந்த போராட்டத்திற்கு நடுவிலும் அப்பவின் அந்த சிம்மாசனத்தை யார் பிடிப்பது என்ற போட்டியும் நிலவுகிறது. பிரகாஷ் ராஜின் மரணத்திற்கு பிறகும் கூட அவரை கொல்ல முயன்றது யார் என்ற கேள்வியும், அவருக்கு அடுத்ததாக இந்த இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற கேள்வியும் தொடர்கிறது. அந்த கேள்விக்கான பதில் தான் மீதிக்கதை. வழக்கமாக மணிரத்தினத்தின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு எல்லாம் மறைமுகமான தூணாக நிற்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தான். செக்க சிவந்த வானம் படத்திலும் அதே பணியை தான் வழக்கம் போல சிறப்பாக செய்திருக்கிறார் ரஹ்மான். விறுவிறுப்பான கேங்ஸ்டர் கதையை , குடும்பக்களத்தில் மிக்ஸ் செய்து எதிர்பாராத கிளைமேக்ஸுடன் முடித்திருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் சொல்லப்போனால் ஒரு க்ளாசிக நாவல் படிக்கும் உணர்வு கிடைக்கிறது இந்த திரைப்படத்தில். பொன்னியின் செல்வனுடன் ஒப்பிட்டு சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், ஆதித்தகரிகாலனாக அரவிந்த்சாமி, வானமாதேவியாக ஜெயசுதா, அருன்மொழி வர்மனாக அருண்விஜய், வந்தியத்தேவனாக விஜய் சேதுபதி என பொருத்திப்பார்கலாமா என கேட்டால் படம் பாருங்கள் உங்களுக்கே புரியும் என்பதே சரியான பதில் இங்கு.