cheeting case on sunder c
பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி. தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' என்கிற பாம்பு சீரியலை இயக்கி தயாரித்து வருகிறார்.
இந்த சீரியலுக்கு கதை எழுதிக் கொடுக்குமாறு இவருடைய 15 வருட நண்பர் வேல்முருகன் என்பவரிடம் கேட்டுள்ளார். கதை எழுதிக் கொடுப்பதற்காக வேல்முருகனுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளமாகக் கொடுப்பதாகவும் முன்பணமாக 50 ஆயிரம் கொடுப்பதாகவும் சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வேல்முருகன் கதை எழுதிக் கொடுத்தும், அவருக்கு கடந்த ஐந்து மாதமாக சுந்தர் சி சம்பளம் கொடுக்கவில்லை எனக் கூறி தற்போது அவருடைய நண்பர் வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்துக் கூறிய வேல்முருகன், சுந்தர்.சி தன்னுடைய 15 வருட நட்பை கேவலப்படுத்திவிட்டார் என்றும் தன்னை நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நான் தற்போது அவரிடம் கேட்டுள்ளது நான் உழைத்ததற்கான ஊதியம் தானே தவிர அவரிடம் உதவி கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
