சந்திரபாபு நாயுடுவின் அமராவதி நதிக்கரை வீட்டை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில் 30 தொழிலாளர்களுடன் ஜேசிபி இயந்திரங்கள் இடித்து தள்ளி வருகின்றன. 

சந்திரபாபு நாயுடுவின் அமராவதி நதிக்கரை வீட்டை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின் பேரில் 30 தொழிலாளர்களுடன் ஜேசிபி இயந்திரங்கள் இடித்து தள்ளி வருகின்றன.

முதல்வராக இருந்த போது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை அறிவித்தார் சந்திரபாபு நாயுடு. 2016-ம் ஆண்டு தான் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அமராவதியில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் புதிதாக ஒரு வீடு கட்டி அந்த வீட்டில் குடியேறினார்.  அந்த வீட்டின் அருகில் ரூபாய் 5 கோடி செலவில் 'பிரஜா வேதிகா' என்ற மற்றொரு புதிய கட்டிடத்தையும் கட்டி கட்சியினரைச் சந்திக்கவும், முக்கிய கூட்டங்கள் மற்றும் அமைச்சரவை கூட்டங்கள் நடத்தவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார். அவர் அங்கு கட்டிடம் கட்டும் போதே அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

புதிதாக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி அந்த கட்டடங்கள்  விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என கூறி இடிக்க உத்தரவிட்டார். நேற்று இரவு முதல் அந்தக் கட்டடத்தை இடிக்கும்பணிகள் தொடங்கி தரைமாக்கப்பட்டது. அமராவதி ஆற்றின் நீர் மட்டம் அதிகபட்சமாக 22.6 மீட்டர். ஆனால் சந்திரபாபு நாயுடுவின் வீட்டு ஆற்றின் தரை மட்டத்தில் இருந்து 19.6 மீட்டரில் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி வீட்டை இடித்து விட்டனர்.

 இந்த வீட்டை ஆசை ஆசையாக கட்டிய சந்திரபாபு நாயுடு பெரும் மனவேதனை அடைந்து இருக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெற்றபோதே இந்த வீட்டை இடிக்கும் முடிவை நிச்சயம் எடுப்பார் என்பதை அறிந்து சந்திரபாபு நாயுடு அந்த வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீட்டை இடித்ததால் தெலுங்குதேசம் கட்சி தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் குண்டூரில் இருந்து விஜயவாடா அருகில் உள்ள கோல்லப்புடிக்கு மாற்றப்பட உள்ளது. அமரவாவதி நகரில் இடிக்கப்பட்ட வீடு இருந்த பகுதியில் சந்திரபாபு நாயுடு புதிதாக வீட்டைத் தேடி வருவதாக தெலுங்குதேசம் கட்சியினர் கூறுகின்றனர்.