கடந்த வாரம், 19 ஆம் தேதி இந்தியன் 2  படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரமாண்ட லைட்டின் பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து கவனக்குறைவு, முன்னெச்சரிக்கை இன்றி படப்பிடிப்பு நடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

மேலும், காயமடைந்த 9 பேர் உட்பட, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரிடத்திலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், கூறப்பட்டது.

இந்நிலையில்,  சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், இன்று காலை இயக்குனர் ஷங்கர் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். 

குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமார் 3 மணிநேரம், இந்தியன் 2 விபத்து குறித்து துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவரிடம் என்ன கேவிகள் எழுப்பப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.