'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே குடும்பப்பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமும் 'அந்நியன்', மாதவனுடன் 'எதிரி', அஜித்துடன் 'திருப்பதி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

இந்நிலையில் தற்போது இவர், 30 வயதை கடந்து விட்டதால் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குணசித்திர வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் மறுத்து விட்டார். 

மேலும் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில்  நடன நிகழ்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

மேலும் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'டார்ச்லைட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். 

நடிகர் விஜயை வைத்து 'தமிழன்' படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.மஜித் இயக்கியுள்ளார்.  

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து வெளியாக தயாராக உள்ள இந்த படம், தணிகை குழுவினர் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த படத்தில் சதா, இடம்பெற்றுள்ள காட்சிகளில் ஆபாசம் அதிகமாக இருப்பதால். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு சென்சார் அதிகாரிகள், சான்றிதழ் கொடுத்தால் அது மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது. இதனால் 'டார்ச்லைட்' படத்தை டிரிப்யூனலில் முறையிட்டு டில்லிக்கு சென்று சான்றிதழ் பெற்று திரும்பியுள்ளனர் படக்குழுவினர்.