வலிமை படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இதற்காக சென்சார் போர்டு 15 காட்சிகளை திருத்தி உள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.

ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருந்த இப்படம் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் போடப்பட்டுள்ளதால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலைமை சீரானது திரையரங்குகளில் வெளியிடுவோம் என படக்குழு தெரிவித்துள்ளது.

வலிமை படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி இதற்காக சென்சார் போர்டு 15 காட்சிகளை திருத்தி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
1. படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டு ஆங்கிலத்தில் உள்ளது. அவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்படி மாற்றப்பட்டு உள்ளது.
2. விலங்குகள் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கபடாத காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன.
3. தங்கசங்கிலி பறிப்பு நிகழ்வின் போது ஆட்டோவில் இருந்து குழந்தையுடன் பெண் ரோட்டில் விழும் காட்சி நீக்கம்.
4. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் சில நீக்கம், சிலவற்றின் நீளமும் குறைக்கப்பட்டுள்ளன.
5. ‘வக்காலி' எனும் வார்த்தை மியூட் செய்துள்ளனர்.
6. சண்டை காட்சியில் கீழே விழும் நபரின் ரத்தம் தரையில் பரவும் காட்சி நீக்கம்.
7. ஒரு நபரை கத்தியால் குத்தும் காட்சி நீக்கம்.
8. கப்பலில் ஒரு நபரை கொல்லும் காட்சி நீக்கம்.
9. ....த்தா எனும் வார்த்தை வரும் காட்சிகளில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளன.
10. நடுவிரலை காட்டும் காட்சி நீக்கம்.
11. போலீசின் நெஞ்சில் கத்தியால் குத்தும் காட்சி நீக்கப்பட்டுள்ளன.
12. கட்டுமான பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளன.
13. போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளில் டிஸ்க்லைமர் பெரிய எழுத்தில் போட அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
14. போதை பொருள் உட்கொள்ளும் காட்சி நீக்கம்.
15. கடவுள் தான் நிஜ சாத்தான் எனும் வார்த்தை நீக்கம்.
