celebrities wishes ajith

சிறுத்தை சிவா இயக்கத்தில் செம மாஸாக உருவாகியுள்ள விவேகம் படத்தின் டீசர். நேற்று இரவு சரியாக 12 :01 க்கு சமூக வளையதளத்தில் வெளியானது.

இந்த டீசர் வெளியானதுமே, ரசிகர்கள் இதை ஷேர் செய்து சில நிமிடங்களிலேயே வைரலாகினர். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள விவேகம் டீசர்.

பல சினிமா பிரபலங்களையும் கவர்ந்திருக்கிறது. விவேகம் படத்தின் டீசரை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்தை இயக்குனர் சிவாவிற்கும், தல அஜித்துக்கும், மற்றும் படக்குழுவினருக்கு தொடர்ந்து தெறித்து வருகின்றனர் .

அதில் முக்கியமானவர், அஜித்தை வைத்து 'மங்காத்தா' படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, இவர் வாவ்... காலையிலேயே இப்படியொரு புத்துணர்ச்சியா... டீசர் பார்த்து வியர்த்து விட்டதாக கூறியுள்ளார்.

நடிகை ராதிகா... அஜித் சூப்பர், பாக்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்லி இருக்காங்க.

 நடிகர் அருள்நிதி... நெவெர் எவர்... சூப்பர் கூல் என்று சொல்லி இருக்காரு.

காமெடி நடிகர் சூரி... தன்னோடைய வாழ்த்த தமிழ்ல, தல அஜித் சார் சிவா சார் ! விவேகம் டீஸர் வேற லெவல்னு சொல்லி இருக்காரு.

இப்படி விக்ரம் பிரபு, தலையோட வில்லன் என செல்லமாக அழைக்கப்படும் அருண் விஜய், தனுஷ், ஜீவா, நடிகை மஞ்சிமா மோகன், ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால், ஜெயம் ரவி, தமன், சிவகார்த்திகேயன் என்று பலர் தொடர்ந்து தங்களோட வாழ்த்து மழையால விவேகம் படக்குழுவினரை நனைய வச்சிருக்காங்க