முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பின் சசிகலாவுக்கு எதிராக பல தகவல்களை வெளியிட்டு, அவருடைய அச்சுறுத்தலால் தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த தகவல் வெளியானதும் பல பொதுமக்கள் மற்றும் இன்றி, பிரபலங்கள் அரவிந்த்சாமி, ஸ்ரீபிரியா, குஷ்பூ, கமலஹாசன், எஸ்.வி.சேகர், மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதவாக பேசிவந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஓ.பன்னீர் செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் இணையும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அது சாத்தியமாகி உள்ளது. இந்நிலையில், அன்று ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பேசிய பிரபலங்கள் அமைதிகாத்து வருகின்றனர்.

மேலும் பன்னீர் செல்வம் தனிமை படுத்தப்பட்டு, சசிகலாவை விட்டு பிரிந்த போது அவரது வீட்டில் அவரை சந்தித்து ஆதரவு கொடுத்த பிரபலங்கள் தற்போது வரை இவர் எடப்பாடியுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் இருந்து பிரபலங்கள் பலர் இவர் மீது அதிருப்தியில் இருப்பதை தெரிவிக்கிறது.