Komban Movie Actor Ilaikkadai Murugan Passed Away : கொம்பன் படத்தில் பஞ்சுமிட்டாய் கலரில் சட்டை இருக்கிறது என்று டயலாக் பேசும் இலைக்கடை முருகன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

Komban Movie Actor Ilaikkadai Murugan Passed Away : தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக பிரபங்களின் மறைவு செய்தி தான் வெளியாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு மூத்த நடிகரும், ஜோதிடத்தில் நாட்டம் கொண்டவருமான நடிகர் ராஜேஷ் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து மத யானைக் கூட்டம், இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் இப்போது கொம்பன் பட துணை நடிகர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சுப்ரமணியபுரம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அதுவும் ஊர் திருவிழா நிகழ்ச்சியில் மொக்கச்சாமி என்ற ரோலில் அவர் நடித்திருந்தார். இதே போன்று கொம்பன் படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கார்த்தி தனது மாமனார் வாங்கி கொடுத்த உடையை அணிந்து சென்ற போது என்ன கொம்பா பஞ்சு மிட்டாய் கலர்ல சட்டை ஜொலிக்கிறது என்று டயலாக் பேசுவார்.

இப்படி சிறிய ரோல் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் இலைக்கடை முருகன். மதுரையில் இலைக்கடை நடத்தி வரும் இவருக்கு இலைக்கடை முருகன் என்ற பெயர் உண்டு. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.