*    ஏஸியா நெட் தமிழ் இணையதளம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல், சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி ஜோதிகாதானாம். கீர்த்தி சுரேஷ், இவர்களின் மகளாக நடிக்கிறார். இம்மாம் பெரிய பொண்ணுக்கு ரஜினி அப்பா என்பதில் பிரச்னை இல்லை! ஆனால் ஜோதான் ரொம்பவே அப்செட்டானாராம். பிறகு தேற்றிவிட்டாரர்களாம். 

*    மகேஷ் பாபுவுக்கு, ராஜமவுலியோடு சேர்ந்து படம் பண்ண ரொம்பவே ஆசை. ஆனால் மவுலிகாரு அவரை கண்டு கொள்வதில்லை. இதனால் தானே முன்வந்து ஒரு தகவலை லீக் பண்ணியிருக்கிறார். அதாவது ஒரு இளம் இயக்குநர் தன்னிடம் வரலாற்று கதை சொன்னபோது ‘சரித்திர படங்களெல்லாம் ராஜமவுலியால்தான் எடுக்க முடியும்’ என்று தான் சொல்லிவிட்டதாக அதில் பொடி வைத்திருக்கிறார். 
நடத்துங்க பிரின்ஸ்!

*    இயல்பிலேயே அடம், திமிர், தெனாவெட்டு என எல்லாமே பிடித்த பொண்ணுதான் இலியானா. டோலிவுட்டில் கலக்கியவர் அப்படியே பாலிவுட் போனார், அங்கே பப்பு வேகாமல் டல்லாகிவிட்டார். இப்போது இன்ஸ்டாவில் தன் படங்களை அப்லோடி, ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சுழலில் ‘இப்போது சல்மானுடன் நடிக்க ஆசை. வாய்ப்புகளை வரவேற்கிறேன்!’ என்று ட்விட்டியுள்ளார். ஆனால் இதே பொண்ணு, இதற்கு முன் சல்மானுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததுதான் ஹிட்டு.

*     இந்தியன் 2 அடுத்தடுத்த ஷெட்யூல்களுடன் அம்சமாய் வளர்ந்தது. ஆனால் திடீரென கமல்ஹாசனால் ஒரு பிரேக் விழுந்திருக்கிறது. கால் அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் கமல் வருவார் என்று ஷங்கர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் கமலோ லேசாக அரசியலில் பிஸியாகிறார். இதனால் ‘எங்கே மறுபடியும் கவுத்திடுவாரோ?’ என்று நொந்து காத்திருக்கிறார்  மிஸ்டர் பிரம்மாண்டம். 

*    வாய்ப்பே இல்லாத நடிகைகள் இப்போதெல்லாம் சோஷியல் மீடியாவில் செம்ம பிஸியாக இருக்கிறார்கள். நடிகை கேத்ரீன் தெரேசாவும், ராய் லட்சுமியும் செம்ம ஹாட்டாக போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் போட்டு இளசுகளை இம்சை பண்ணுகிறார்கள். அதிலும் கேத்ரீனின் குட்டை டிரவுசருக்கு எக்கப்பட்டு ஷொட்டும், குட்டும் வந்து விழுகிறது.