38 வயதாகும் நடிகை மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு. இவருக்கு வயது 38. இவர் அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகரில் வாசித்து வருகிறார். இவர் கேப்டன் அமெரிக்கா, அவென்ஜர்ஸ், உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்து வருவது மட்டும் இன்றி, சில படங்களை தயாரித்தும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு தாய், பேட்ரீஸியா அவருடைய சகோதரருடன் ஹூஸ்டனில் வசித்து வந்தார். ஒரு சில காரணங்களுக்காக மீண்டும் கன்சாஸ் நகரில் அவர் குடியேற இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மகள் - தாய் என இருவருக்குள்ளும் ஏதோ வாக்கு வாதம் ஏற்பட்டு, பெற்ற தாயையே, மகள் மோலி கொலை செய்துள்ளதாக தற்போது கன்சாஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஆனால், என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்தார் என்பது குறித்து மோலியிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.