கடந்த வாரம் பெரியாரை பற்றி துக்ளக் விழாவில் ரஜினி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.  அதற்காக ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெரியாரிஸ்டுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இல்லாததை தான் பேசவில்லை என்றும் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக அறிவித்தார். 

ஒருதரப்பினர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில்... பெரியாரிஸ்ட்டை சேர்ந்த பலர், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ரஜினியின் உருவ பொம்மைகளை எரித்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் ரஜினி மீது பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டது. இப்படி தொடர பட்ட வழக்குகள் இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  

வழக்கை விசாரித்த நீதிபதி, அவகாசம் வழங்கிய பின்னர்தான் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். புகார் கொடுத்த 15 நாட்களுக்கு முன்பாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? என கேள்வி எழுப்பி,  திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அளித்த புகார் மற்றும் கோவையை சேர்ந்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நேருதாஸ்  உயர்நீதிமன்றத்தில் மன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இந்த செய்தியை காலையில் இருந்தே கொண்டாடி வருகின்றனர் ரஜினியின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள். 

இதுஒருபுறம் இருக்க தற்போது, பாபா முத்திரையில்... தீ பற்றி எறிவது போலவும், ரஜினியின் முகம் வெறித்தனத்தோடு இருப்பது போன்றும் அதில் மன்னிப்பு கேட்க முடியாது என்கிற வசனம் எழுதப்பட்ட புகைப்படத்தை, ரஜினியின் ரசிகர்கள் வாட்டஸ் ஆப்பிள் டிபியாக வைத்து வைரலாக்கி வருகிறார்கள்.