விஸ்வாசம் படம் வெளியாகி ஒருவாரம் கடந்தும் அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி குறைந்தபாடில்லை. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் காட்டும் விஸ்வாசம் அதிரிபுதிரியாகி வருகிறது.

 

ரஜினி நடித்த பேட்ட படத்துடன் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இதுவரை வெளியான அஜித் படங்களின் வசூலையே முறியடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விஸ்வாசம் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்து வருகிறது. வெளிநாடுகளில் பேட்ட படம் வசூல் குவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் விஸ்வாசம் படத்தின் சாம்ராஜ்யம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 

ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர். இன்னும் சில வெறித்தன ரசிகர்கள் காளை மாடுகளுடன் படத்தை பார்க்க வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மாட்டுப் பொங்கலான நேற்று மதுரை, உசிலம்பட்டியிலுள்ள மாயாண்டி திரையரங்கிற்கு சில ரசிகர்கள் தாங்கள் வளர்க்கும் காளைமாடுகளுடன் வந்திருந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திரையரங்க நிர்வாகம் காளைமாடுகளை அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால், கோபமடைந்த அஜித் ரசிகர்கள் படத்தை பார்க்காமலேயே அதிருப்தியில் திரும்பி சென்றனர்.