bruslee biography movie
கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில் பல இயக்குனர்கள் விளையாட்டு வீரர்கள், பிரபல நடிகைகள் பற்றிய திரைப்படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நடிகை சில்க் ஸ்மிதா, மேரி கோம், தோனி ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில், சச்சின், சாவித்திரி ஆகியோரின் படத்திற்கும் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, உலகம் முழுவதும் புகழ்பெற்ற அதிரடி மன்னனான புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் இயக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

'லிட்டில் டிராகன்' என்ற பெயரில் உருவாகும் இந்த படம் கடந்த 1950 -களில் புரூஸ்லீ, ஹாங்காங்கில் அனுபவித்த இளமைக் கால காதல், குடும்பத்தின் ஏமாற்றம், நட்பு, துரோகம், நிறவெறி எனப் பல பரிமாணங்களை வெளிக்கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் கதை விவாதத்தில் புரூஸ் லீ-யின் மகள், ஷேனன் லீ பங்கெடுக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் சேகர் கபூர் கூறியபோது, ''புரூஸ் லீ மிகவும் திறமை படைத்த மற்றும் பிரபலமான தற்காப்புக் கலை வல்லுநர் என்பது தெரியும்.
இதைத் தவிர்த்து, புரூஸ் லீ என்பவர் யார் என்ற கேள்வியைத் தேடும் படைப்பாக இந்தப் படம் இருக்கும்" என்று கூறியுள்ளார். இதனால் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
