அட்டக்கத்தியை வீசி ரசிகர்கள் மனதில் ஆழமாய் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பா.இரஞ்சித்.

“மெட்ராஸ்” மூலம் ரசிகர்களின் பார்வைக் கோணத்தை அரசியல் குறியீடுகள் நோக்கி நகர்த்தியவர்.

ரஜினி காந்தை வைத்து “கபாலி” எடுத்து உச்சியில் எளிமையாக உட்கார்ந்திருப்பவர். சந்தோஷமாய் இருந்த தமிழர்களுக்கு மகிழ்ச்சியை நினைவூட்டியவர்.

தம்பி கார்த்திக்கை இயக்கியவர் இப்போது அண்ணன் சூர்யாவை வைத்தும் இயக்க இருக்கிறார் பா.இரஞ்சித்.

’கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் பா.ரஞ்சித்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைய உள்ளார். இந்த புதிய படத்திற்கான ஸ்கிரிப்டை பூர்த்தி செய்துள்ள பா.இரஞ்சித், படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை துவங்கி விட்டார்.

இந்த நிலையில் ரஜினியின் படத்திற்கு பிறகு, பா.இரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

இந்தப் படத்திற்கான கதையை கூட பா.இரஞ்சித் தயார் செஞ்சிட்டாராம்.

சில மாதங்களுக்கு முன்னர், சூர்யாவை சந்தித்த பா.இரஞ்சித் இரண்டு கதைகளை கூறியிருந்தார். ஆனால் அதே சமயத்தில்தான் ரஜினிகாந்தை இரண்டாது முறையாக இயக்கும் வாய்ப்பும் ரஞ்சித்திற்கு கிடைத்தது.

எனவே, இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என நினைத்த ரஞ்சித், முதலில் ரஜினி படத்தை இயக்க தயாரானார்.

இருவரும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

தம்பிக்கு “மெட்ராஸ்” கொடுத்த பா.இரஞ்சித் அண்ணன் சூர்யாவுக்கு என்ன தருவார்? பார்ப்போம்…