எங்கள் குடும்பத்தின் அச்சாணி முறிந்துவிட்டது என்றும், இனி எங்கள் வாழ்க்கை முன்புபோல் இருக்கப் போவதிலலை என்றும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்திரையுலகில் அறிமுகமாக நடிகை ஸ்ரீதேவி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிந்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கினார். பின்னர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என அனைத்து தரப்பு ரசிகர்களாலும் போற்றப்பட்டு வந்த இவர், கடந்த வாரம் உறவினர் திருமணததுக்காக துபாய் சென்றிருந்தார். அப்போது அங்கு  குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

இந்நிலையில் மும்பையில் மக்கள் வெள்ளத்தில் நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடந்தது. நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நேற்று  தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் நண்பராக, மனைவியாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தவரை இழப்பதென்பது வார்த்தைகள் விவரிக்கமுடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

இத்தருணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்துக்கு அவர் சாந்தினி, சிறந்த நடிகை. எனக்கு அவர் காதலி, நண்பர், இரு குழந்தைகளின் தாய் மற்றும் என் துணைவி. என் மகள்களுக்கு அவர்தான் எல்லாமும். எங்கள் குடும்பத்தின் மைய்ய அச்சே அவர் தான் என குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த அச்சாணி முறிந்துவிட்டது என போனி கபூர் தெரிவித்துள்ளார்..

எங்களுடைய துக்கத்தைத் தனிப்பட்ட முறையில் அனுஷ்டிக்க உதவுங்கள். ஸ்ரீதேவி குறித்து பேசவேண்டுமென்றால் அனைவரையும் ஒன்றுபடுத்தும் சிறப்பான நினைவுகள் குறித்து பேசுங்கள். அவர் ஒரு நடிகையாக இருந்ததை யாராலும் மாற்றமுடியாது. அதற்கு மதிப்பளியுங்கள் என தெரிவித்துள்ளார்.

இனி எங்கள் வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை என்று  போனி கபூர் தனது அறிக்கையில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்