எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி, அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்று அடுத்ததாக தயாரிக்க உள்ள ஸ்போர்ட்ஸ் படத்தின் பூஜையை போட்டுள்ளார் போனி கபூர். 

இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படம் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின்  வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அமித் சர்மா இயக்கவுள்ளார்.  

படத்தின் பூஜை போடப்பட்ட இன்றே, படப்பிடிப்பு பணிகளும் ஆரம்பமானது. இதில் தயாரிப்பாளர் போனி கபூரின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர். தற்போது இந்த படத்திற்கு 'மைதான்' என பெயர் வைத்துள்ளனர் படக்குழுவினர் என தெரியவந்துள்ளது.