போனிகபூர் ஸ்ரீதேவி எப்படிப்பட்ட கணவன் மனைவி என்று இந்திய சினிமா பிரபலங்களுக்கு நன்றாகவே தெரியும். கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தும், உயிருக்கு உயிராக காதலித்து கல்யாணம் பண்ணவர் தான் இந்த போனி. ஸ்ரீதேவியும் மரணிக்கும் வரை நல்ல மனைவியாகவும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகவும் இருந்துள்ளார். தனது காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதால் போனி இப்போது துக்கத்தில் தவித்து வருகிறாராம்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி துபாய் போலீசார் ஸ்ரீதேவியின் கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை  நடத்தினார்கள்.  இந்த விசாரணையில், திருமணம் முடிந்த கையோடு மும்பை வந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சனிக்கிழமை துபாய்க்கு சென்றுள்ளார். மும்பைக்கு சென்ற நீங்கள் எதற்காக திரும்பி வந்தீர்கள் என்று துபாய் போலீசார் போனி கபூரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், இறுதியில் அவர் குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி வழக்கை முடித்துவிட்டு ஸ்ரீதேவியின் உடலை கொடுத்தனர்.

இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவிக்கு நடிகர் நடிகைகள் இறுதிமரியாதை செலுத்தினர். இதனை அடுத்ததாக மகராஷ்டிரா அரசு மரியாதையோடு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவி மறைந்து ஒருவாரம் ஆன நிலையில், அவரது கணவர் எதற்காக மும்பை வந்து திரும்பவும் எதற்காக துபாய் சென்றார் என்பதற்காக தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்காக அவரின் கணவர் போனி கபூர் பெரிய சர்பிரைஸுக்கு ஏற்பாடு செய்திருந்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் மும்பை அந்தேரியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் வேறொரு இடத்தில இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாறினார்கள். 

என்னதான் புதிய வீட்டிற்கு வந்தாலும் ஸ்ரீதேவிக்கு அந்தேரி வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஆசை கடந்த சில வருடங்களாகவே இருந்ததாம். இதை அவர் தனது கணவரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த கணவர் போனி கபூர் தனது காதல் மனைவி ஸ்ரீதேவிக்கு தெரியாமலேயே அந்தேரி வீட்டை புதுப்பித்து வந்துள்ளார். தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் அன்று அவருக்கு சர்பிரைஸாக அந்த வீட்டில் குடியேற திட்டமிட்டிருந்தார் போனி.

இதே சர்ப்ரைசோடு சென்று தனது மனைவியை இந்தியாவுக்கு அழைத்துவர சென்றிருக்கிறார் ஆனால் அவரை பிணமாக கொண்டுவந்திருப்பது. அவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிருக்கு உயிராக நேசிக்கும் மனைவியின் பிறந்தநாளுக்காக போனி செய்த ஏற்பாடுகள் வீணாகிவிட்டது.

ஸ்ரீதேவி தனது ஆசை நிறைவேறாமலேயே இறந்துவிட்டார். ஜான்வி, குஷிக்கு தனது மகன் அர்ஜுன் கபூர் ஆதரவாக உள்ளாராம்.