நடிகர் தனுஷ்  தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடித்து வரும் திரைப்படம் 'அசுரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.  

மேலும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.  மேலும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் இந்த படத்தில் கடந்த ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'ராட்சசன்' புகழ் பொம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பொம்மு அபிராமி, இயக்குனர் வெற்றி மாறனுடன் எடுத்து கொண்ட புகைப்படவும் வெளியாகி வைரலாகி வருகிறது.