தல அஜித் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டு பாட்டு அறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து, போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று அஜித் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக அணைத்து பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் இருப்பதால் என்னவோ, சிலர் இது போன்ற வெடிகுண்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் தளபதி விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக எண் 100 க்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று, தீவிர சோதனை செய்த போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே இது வதந்தி என தெரியவந்தது.

பின்னர் எங்கிருந்து அந்த அழைப்பு வந்தது என விசாரித்தபோது, விழுப்புரத்தை சேர்ந்த, புவனேஷ் என்பவர் போன் செய்ததும் அவர் மன நலம் பாதிக்க பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து, தல அஜித் வீட்டிலும் வெடிகுண்டு உள்ளதாக போன் செய்த மர்ம நபர், அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டார்.

எனவே போலீசாரும் அடித்து பிடித்து கொண்டு,  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது, அங்கு வெடிகுண்டு போல் எந்த பொருளும் கிடைக்கவில்லை. எனவே அது வதந்தி என தெரியவந்தது. 

பின்னர் அந்த கால் எங்கிருந்த வந்தது என சைபர் கிரைமில் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். இதில் விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் தான் மிரட்டல் விடுத்துள்ளதாகவும். ஆனால் அது ஏற்கனவே விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தவரா என்பதை போலீசார் தெரிவிக்க வில்லை. திடீர் என இந்த தகவல் வெளியானதால் அஜித்தின் ரசிகர்கள் பரபரப்பில் உச்சத்திற்கே சென்று பின், அமைதியாகினர்.