‘டான்ஸ் இண்டியா டான்ஸ்’ நிகழ்ச்சியின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானவரும், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘லக்‌ஷ்மி’ படத்தின் மெயின் வில்லனுமான சல்மான் யூசுப் கான் மீது பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது புகாரை அளித்திருப்பர் ஒரு மும்பை டான்ஸர்.

‘டான்ஸ் இண்டிய டான்ஸ்’ சீஸன் 1ன் வெற்றிக்குப் பிறகு மிகவும்பிரபலமான யூசுப் கான் ‘ஏ.பி.சி.டி’  [ANY BODY CAN DANCE], தமிழில் பிரபுதேவா நடித்த ‘லக்‌ஷ்மி’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இவர் மீது மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்த டான்ஸர் தனது புகார் மனுவில், தன்னிடன் சல்மானும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவரது சகோதரரும் தன்னிடம் இருமுறை  தவறாக முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

’நான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை விஷயமாக லண்டனில் இருந்தேன். அப்பொழுது சல்மானின் மேனேஜர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் நாடு திரும்பிய பிறகு ஓஷிவாராவில் உள்ள ஒரு காபி கடையில் வைத்து சல்மானை சந்தித்தேன். துபாயில் பாலிவுட் பார்க்கில் டான்ஸ் ஆடும் வாய்ப்பை அளித்தார் அவர்.

வாய்ப்பு அளித்த பிறகு ஒருநாள்  என்னை தன் காரில் வீட்டில் இறக்கிவிட்டார். கார் பயனத்தின்போது  சல்மான் என்னை கண்ட இடங்களிலும்  தொட்டார். இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று நான் சல்மானிடம் கூறினேன். அதற்கு அவரோ இது எல்லாம் பாலிவுட்டில் ரொம்ப சகஜம் என்றார்.பின்னர் சல்மானின் மேனேஜர் போன் செய்து துபாய் நிகழ்ச்சிக்கு வரச் சொன்னார். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நானும், என் நடனக் குழுவும் துபாய் சென்றோம். ஆகஸ்ட் 30ம் தேதி பஹ்ரைனில் உள்ள பாலிவுட் பார்க் ரிசார்ட்டில் நடக்கும் மற்றொரு நடன நிகழ்ச்சிக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார் சல்மான்.

துபாய் விமான நிலையத்தில் வைத்து சல்மான் தனது சகோதரரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நடன நிகழ்ச்சி முடிந்து துபாய்க்கு காரில் திரும்பி வந்தபோது சல்மானும், அவரின் சகோதரரும் என்னை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சல்மான் என்னையும், என் நடனக் குழுவையும் கொடுமைப்படுத்தினார், மிரட்டினார். பின்னர் எங்கள் ஒப்பந்தத்தை அவராக ரத்து செய்துவிட்டு எங்களை மும்பைக்கு அனுப்பி வைத்துவிட்டார். என்னைப் பற்றிப் போலீஸில் புகார் செய்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று சல்மான் மிரட்டியுள்ளதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட  போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.