இந்தியாவில் நடந்து வரும் போராட்டத்தை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கருத்து தெரிவித்துள்ளார் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பாலிவுட் நடிகையின்  இக்கருத்துக்கு  சமூக வலைத்தளத்தில் ஆதரவு  பெருகி வருகிறது .  குடியுரிமை திருத்த  சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   டெல்லி ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி அது பாதுகாப்பு படையினர் கலைக்க முயற்சி செய்து அது கலவரத்தில் முடிந்துள்ளது. 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் தீவிரமடைந்தது அது நாடு முழுவதும் பரவியுள்ளது . இதற்கிடையில்  போராட்டம்  குறித்து கருத்து தெரிவித்து வரும் பிரபலங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் பல திரைநட்சத்திரங்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் அதில் சிலர் வன்முறைகளைத் தவிர்த்து அமைதியான முறையில் போராடுங்கள் என அறிவுரை கூறி வருகின்றனர் .  இன்னும் சில முக்கிய பிரபலங்கள் வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர் . 

இந்நிலையில்  குடியுரிமை சட்டம் மசோதா  கொண்டுவந்து  அது சட்டமாகி  அதனால் போராட்டம் வெடித்துள்ளதுவரை தொடர்ச்சியாக அதற்கு  எதிராக தனது கருத்தை பதிவு செய்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ,  இந்த போராட்டம் குறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது . அதில்,    இந்தியா போராடிக்கொண்டிருக்கிறது ,  அதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது,  தயவுசெய்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுங்கள்  எங்கள் குரல்வலைகளை  நெரிக்க  முயற்சிப்பதை நிறுத்துங்கள் என அவர் காட்டமாக  தெரிவித்துள்ளார் .