தமிழக மக்கள் மட்டும் இல்லாமல் கபாலி படத்திற்கு பிறகு உலகமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கொண்டாடி வருகிறது .

இந்நிலையில் பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் சூப்பர் ஸ்டார் குறித்து சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 அது என்னவென்றால், நல்ல உடல்வாகும் பார்ப்பதற்கு அழகானவர்கள் தான் ஸ்டார் ஆக முடியும் என்றால் பார்ப்பதற்கு அழகாக இல்லாத ரஜினிகாந்த் இன்று சூப்பர் ஸ்டாராக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் இந்த கருத்து குறித்து இணையத்தில் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது .