பொதுவாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை விட கதாநாயகர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்போதோ... கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இப்படி வெளிவந்த படங்கள் பற்றியும், அதில் நடித்த கதாநாயகிகள் பற்றியும் பார்க்கலாம். 

நடிகை நயன்தாரா நடித்து கடந்த வருடம் வெளியான அறம் திரைப்படம் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக ஓடி மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. 

அதே போல் நடிகை ஜோதிகா ரீஎன்ட்ரி கொடுத்த படமான '36 வயதினிலே' படத்தை தொடந்து தேர்வு செய்து நடித்து வரும் படங்கள் அனைத்தும் பெண்களுக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கும் படங்களாகவே அமைந்து வருகிறது. 

கடந்த மாதம் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்து வெளிவந்த 'நாச்சியார்' அனைத்து பெண்கள் மத்தியிலும் பாராட்டைப்பெற்ற படமாக அமைந்தது.

 

அருவி படம் முழுக்க முழுக்க ஒரு பெண்ணை சுற்றிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததுதான். 

பாலிவுட் திரையுலகில் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகிலும் இதே போன்ற படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. 

தற்போது வளர்ந்து வரும் அனைத்து நடிகைகளும் பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் படியான கதையை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.