நாடு முழுவதும் சமீபத்தில் பிரதமர் மோடி கருப்பு பணத்தை அழிக்கும் முயற்சிக்காக 500, 1000 ரூபாய்களை செல்லாது என்று சொன்ன அறிவிப்பால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை மக்கள் கியூவில் நிற்கிறார்கள் என்று கூட பார்க்காமல், நேராக வங்கி உள்ளே நுழைந்திருக்கிறார். 

இதைப் பார்த்து நீண்ட நேரமாக வரிசையில் நின்ற பொது மக்கள் கோபப்படனர் , ஆனால் அவர் நுழைந்த இரண்டு நிமிடத்தில் சுவற்றில் அடித்த பந்து போல் பதறி அடித்து வெளியே வந்துள்ளார்.

காரணம் வங்கியின் மேனேஜர் அவரை உங்களை போல் பலர் வெளியே நிற்கின்றனர் வரிசையில் தான் பணம் தர முடியும் என தாறுமாறாக திட்டிவிட்டாராம்.

இதனால் நடிகை பாபிலோனா பொது மக்கள் வரிசையில் நின்று பணம் எடுத்து சென்றுள்ளார் , இதில் இருந்து சினிமா காரர்கள் என்றாலும் இப்போது வங்கியில் ஒரே நிலை தான்.